Thursday, October 15, 2015

On Thursday, October 15, 2015 by Unknown in ,    


திருப்பூரில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற இளம் பெண் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் அய்யனார்(35). இவர் திருப்பூர் மாஸ்கோ நகர் பகுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி பிரபா(27). இவர்கள் கடந்த 2 ஆண்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இத்தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன், பிரபாவை, அய்யனார் திட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த பிரபா வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார்.
இதில் படுகாயமடைந்த பிரபாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிதனர். சிகிச்சை பலனின்றி பிரபா புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அய்யனாரைத் தேடி வருகின்றனர்.

0 comments: