Friday, November 20, 2015

On Friday, November 20, 2015 by Unknown in , ,    
திருச்செந்தூர் கடலில் மூழ்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 
 
சுரண்டை அருகே உள்ள சிவகுருநாதபுரத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம் மகன் அருண்ராஜ் (20). இவர் கூடை பின்னும் தொழில் செய்து வந்தார். அருண்ராஜ் நேற்று முன்தினம் திருச்செந்தூர் கோவிலில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்றிருந்தார். நேற்று அதிகாலை அருண்ராஜ் கடலில் குளித்தார். 

அப்போது அலை ஒன்று அவரை இழுத்து சென்றது. அவர் நீரில் மூழ்கி தத்தளித்தார். அப்போது சிலர் கடலில் குதித்து அருண்ராஜை கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அருண்ராஜ் இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: