Friday, December 11, 2015

On Friday, December 11, 2015 by Unknown in , ,    


தூத்துக்குடி மாவட்டத்தில் (10.12.2015) அன்று கூட்டுறவுத்துறையின் சார்பில் ரூ.3 இலட்சம் மதிப்பிலும், உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மகளிர் திட்டம் சார்பில் ரூ.17 இலட்சம் மதிப்பிலுமான வெள்ள நிவாரணப் பொருட்களை வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் கடலூர் மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., அவர்கள் அனுப்பி வைத்தார்.
இந்த வெள்ள நிவாரணப் பொருட்கள் 3 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அனைத்து வகையான அத்தியாவசிய பொருட்களும் உள்ளன. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தேவையான சீருடைகள், சமையல் பாத்திரம், நாப்கின்கள், போர்வை, பாய் போன்றவை அனுப்பிவைக்கப்பட்டது.
உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் அரிசி, பருப்பு வகைகள், மருந்துகள், குழந்தைகளுக்கான டையப்பர்ஸ் மற்றும் இதர அடிப்படைத் தேவைகளான சோப், பேஸ்ட், பிரஸ் போன்றவைகளும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, திட்ட அலுவலர் மகளிர் திட்டம் திருமதி.இந்துபாலா, மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.ஆனந்த், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர்.ஜெ.தங்கவிக்னேஷ், துணை பதிவாளர் திருமதி.ச.வீ.சிவகாமி, கூட்டுறவு ஒன்றியத் தலைவர் திரு.ஆர்.சுதாகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: