Saturday, January 09, 2016

On Saturday, January 09, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் மற்றும் தலைவர் பசுபதி பாண்டியன் 4ம் ஆண்டு நினைவுநாள் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் அலங்காரத்தட்டில் வருகிற 10ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடப்பதற்காகவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையிலும், இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் வருகிற 11ந் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த காலகட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலும், பிற பகுதிகளில் இருந்தும், விழாவில் கலந்து கொள்ளும் மக்கள் மற்றும் பொதுமக்கள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், ஊர்வலமாக வருவதற்கும், 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் நுழைவதற்கும் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144ன் கீழ் மாவட்ட கலெக்டரால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த தடை உத்தரவு பள்ளி, கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவுக்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றுக்கு பொருந்தாது.
மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடக்க இருந்தால், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை அணுகி முன் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த தடை உத்தரவு திருமணம், மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு பொருந்தாது. நிகழ்ச்சியை அமைதியான முறையில் நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் எம்.கோட்னீஷ் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

0 comments: