Tuesday, December 09, 2014

On Tuesday, December 09, 2014 by Unknown in ,    
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனியாக சிறப்பு தேர்வு நடத்தினார்கள். இப்படி தேர்வு நடத்தி தேர்வான ஆயிரக்கணக்கான மாற்றுத்
திறனாளிகளுக்கு இன்னும் பணி வழங்காமல் அரசு காலம் கடத்துவதாக கூறி மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது நம்மிடம் பேசிய அவர்கள், நீதிமன்றமே 2007 முதல் 2011 வரை காலியான ஆயிரத்து நூறு பணியிடங்களையும், அதற்கு பின் ஏற்பட்ட காலியிடங்களையும் நிரப்ப சொல்லி உத்தரவிட்டும் கல்வித்துறை இந்த உத்தரவை கண்டு கொள்ளாமல் உள்ளது.
தாங்கள் படித்து பட்டம் வாங்கி வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் கஷ்டப்படுகிறோம். எனவே அரசு உடனே வேலை வழங்க வேண்டும். இல்லையேல் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம்" என்றனர்.

0 comments: