Tuesday, December 09, 2014

On Tuesday, December 09, 2014 by Unknown in ,    
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு  பாலாபிஷேகம் செய்து மக்கள் வழிபட்டனர்.
 
தமிழகத்தில் பழமை  என்றால் ஒரு அலாதிதான். தமிழகம் என்றால் பழமையும், பண்பாடும் தான் நமது பெருமை. ஆனால் நாம் நம் பழமையை மறக்க தொடங்கிவிட்டோம். அதற்கு அடையாளமாக, மதுரை மாவட்டம் மதிச்சியம் நடுத்தெருவில் சிவக்குமார் என்பவர் நகை உரிமையாளராக இருக்கிறார்.

இவர் தனது பழைய வீட்டை இடித்துவிட்டு புதுவீடு கட்டுவதற்கு பழைய வீட்டை ஜேசிபி வைத்து இடித்துவிட்டு ஆழமாக தோண்டினார். அப்போது பழமையான அம்மன் சிலை ஒன்று கிடைத்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 
அங்குள்ளா மக்கள் அச்சிலையை சுத்தப்படுத்தி பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். மேலும் அங்கு கோயில் ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தனர்.

0 comments: