Thursday, February 11, 2016

On Thursday, February 11, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த சரக்கு கப்பலில் சட்டவிரோதமாக கடத்தி வந்த 12 கிலோ தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கேப் நிமோ என்ற சரக்கு கப்பல், கொழும்பு வழியாக நேற்று தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது. இந்த கப்பலில் இருந்த கன்டெய்னர் பெட்டிகள் லாரி மூலம் தெர்மல் நகரில் உள்ள தனியார் யார்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், அந்த கண்டெய்னர் பெட்டிகளில் தங்கம் கடத்தி வரப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது,  சுமார் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான அந்த தங்கக் கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3.43 கோடி எனத் தெரிகிறது. மலேசியாவில் இருந்து, வீட்டு உபயோகப் பொருட்களுடன் சேர்த்து 12 கிலோ தங்கத்தை சட்ட விரோதமாக மறைத்து வைத்து தங்கத்தை கொண்டு வந்துள்ளது விசாரணையில் தெரிகிறது.  கண்டெய்னர் பெட்டியின் உள்ளே வாஷிங் பவுடர் பாக்கெட்டுக்குள் இந்த தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.  இது தொடர்பாக முகம்மது ரபீக், செல்வராஜ், ராஜூ, ரஹ்மத் அலி ஆகிய 4பேரை கைது செய்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: