Tuesday, February 16, 2016

On Tuesday, February 16, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் இன்று மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 190 பெண்கள் உட்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர். 

ஊதிய உயர்வு, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 10–ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றுள்ளதால் அரசு துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தூத்துக்குடியில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலளார் ராமமூர்த்தி தலைமையில், அங்கன் வாடி ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள் பழைய பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட 190 பெண்கள் உட்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.  முன்னதாக குரூஸ் பர்னாந்து சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

0 comments: