Monday, February 01, 2016

On Monday, February 01, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. தென் மண்டல அமைப்பாளரும், மாவட்ட செயலாளருமான சுந்தர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஜான்ராஜா முன்னிலை வகித்தார்.
இதில் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநில நிர்வாகிகள் ஜெயராஜ், பாக்கிய ரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் சரத்குமார் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வருகிற தேர்தலில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் தென்காசி, ஆலங்குளம் தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்பு உள்ளது. அதிலும் தென்காசி தொகுதிக்குதான் அதிக வாய்ப்பு உள்ளது.
எந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன் என இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பாக கட்சி தொண்டர்களின் விருப்பத்தை பரிசீலித்து வருகிறேன். எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டவர்கள் கட்சியை விட்டு வெளியேறியதற்காக வருத்தப்படவில்லை.
இவர்கள் வெளியேறியதால் எங்களது கட்சிக்கு பலம் அதிகரித்துள்ளது. பலவீனம் ஏற்படவில்லை. வருகிற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பது குறித்து சென்னையில் வருகிற 7–ந்தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்வோம்.
தற்போது நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் தான் இருந்து வருகிறோம். அ.தி.மு.க.வை நான் விமர்சித்ததாக கட்சியை விட்டு வெளியேறியவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. தமிழகத்தில் தற்போது அனைத்து கட்சியினரும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். ஏன் நாங்கள் முதல்வராக கூடாது. எங்களுக்கும் அந்த ஆசை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

0 comments: