Friday, February 12, 2016

On Friday, February 12, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி சிதம்பரநகரில் செயல்பட்டு வந்த ரயில்வே முன்பதிவு மையம் வருகிற 15ம் தேதி முதல் மூடப்படுகிறது. 

தூத்துக்குடி சிதம்பரநகரில் வ.உ.சி கல்விக்கழகம் சார்பில் ரயில்வே முன்பதிவு மையம் கடந்த 16.2.2013 முதல் செயல்பட்டு வருகிறது. இது தூத்துக்குடியில் மேற்குப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த முன்பதிவு மையத்தினை வ.உ.சி கல்விக்கழகம் சேவை அடிப்படையில் நடத்தி வந்தது. இந்நிலையில் இந்த முன்பதிவு மையம் வருகிற 15ம் தேதி முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது ரயில் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.25 வசூலிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டதாம். இதற்கு வ.உ.சி. கல்விக் கழகத்தினர் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக ரயில்வே முன்பதிவு மையம் மூடப்படுகிறது. இது ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரான நட்டர்ஜியிடம் கேட்டபோது, இந்த பிரச்சனை எனது கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை. இது தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றார். 

0 comments: