Tuesday, February 23, 2016

On Tuesday, February 23, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் லோடு ஆட்டோ மோதி பைக்கில் சென்ற விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி, அத்திமரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லாரன்ஸ் (48). விவசாயி. இவர் நேற்று மாலை அத்திமரப்பட்டியில் இருந்து தூத்துக்குடிக்கு தனது மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். முத்தையாபுரம் உப்பாற்று ஓடை அருகே வந்தபோது, தூத்துக்குடியில் இருந்து ஸ்பிக் நகர் நோக்கிச் சென்ற லோடு ஆட்டோ இவரது பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த லாரன்ஸ், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து லோடு ஆட்டோ டிரைவரான முத்தையாபுரம் சூசையா நகரைச் சேர்ந்த அந்தோணி மகன் அஜித் (19) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

0 comments: