Tuesday, February 23, 2016
On Tuesday, February 23, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் விதத்தில் தமிழக விவசாயிகள் தங்களை தயார் படுத்திக்கொண்டு, குறைந்த தண்ணீரை பயன்படுத்தி அதிக மகசூல் பெற கற்று கொள்ள வேண்டும் என க்ளைமா-அடாப்ட் திட்டத்தின் ஆராய்ச்சி.
தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் மற்றும் பொதுபணித்துறை நார்வே அரசின் நிதி உதவியுடன் பருவ நிலை மாற்றம் குறித்த ஆராய்சிகளை மேற்கொண்டு வருகிறது. …
பூமி வெப்பமடைவதால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழையில் 50% குறிப்பிட்ட சில தினங்களிலேயே ஒட்டுமொத்தமாக பெய்து விடுகிறது. இதனால் வெள்ளபெருக்கு ஏற்படுகிறது. அதன் பிறகு பெரும்பாலான நாட்கள் ஆறு, ஏரி, குளங்கள் வறண்டு காணபடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 10 சென்டிமீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டமானது குறைந்து கொண்டே போகிறது. நமக்கு கிடைக்கும் மொத்த தண்ணீரில்
70% விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். தண்ணீர் உபயோகிக்கும் திறனை 16% விவசாயிகள் மட்டுமே அறிந்துள்ளனர். வறட்சி காலங்களில் விவசாயிகள் வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் தவிக்கிறார்கள். இவர்களது வாட்டத்தை போக்கும் விதமாக க்ளைமா-அடாப்ட் திட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். இதில் குறைந்த தண்ணீரை செலவு செய்து அதிக மகசூல் பெறுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையிலான திருந்திய நெல் சாகுபடி முறைக்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது, நுண்ணுயிரிகளை பயன்படுத்துவது, மண்ணை உயிர்பிப்பது, சிறு குறு தானியங்கள் உற்பத்தி செய்வது, சொட்டுநீர்பாசன முறை பின்பற்றுவது, விவசாயத்தில் நவீன கருவிகள் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை விவசாயிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.
62 வகையான நெற்பயிர்களை நடவு செய்து ,அதிக வெப்பத்தில் குறைந்த தண்ணீரை கொண்டு அதிக மகசூல் பெறுவதற்கான ஆய்வுகள் ஈரோடு மாவட்டத்தில் பசுமையான காளிங்கராயன் பகுதியிலும், திருச்சியில் வரட்சியான பொன்னனை அணைக்கட்டு பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில், திருப்பூர் வாலிபாளையம், கே.பி.என்., காலணி, முள்ளுக்காடு பகுதிகளில் எம்.ஜி.ஆர் பிறந...
-
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் ம...
-
பொங்கலூர் ஒன்றியம் வேலம்பட்டியில்ரூ.11. 06 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்...
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment