Thursday, February 04, 2016
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
பா.ம.க. வரைவு தேர்தல் அறிக்கை அறிவிப்பு பொதுக்கூட்டம், தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலையில் நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் உஜ்ஜல் சிங் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் லிங்கராஜ், மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் அரிச்சந்திரன், மத்திய மாவட்ட தலைவர் சேசையா பர்னாந்து, தெற்கு மாவட்ட தலைவர் ச.வள்ளிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட செயலாளர் மு.சின்னத்துரை வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில், பா.ம.க. முதல்-அமைச்சர் வேட்பாளரும், எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாமக ஆட்சிக்கு வந்தால் மக்களை தேடி வருவேன். போலீஸ் பாதுகாப்பு எதுவும் தேவையில்லை. மதுவையும், ஊழலையும் ஒழிப்பதுதான் மாற்றம். பாமக ஆட்சிக்கு வந்தால் கல்வியும், சுகாதாரமும் இலவசமாக வழங்கப்படும். ஏழை மாணவரும், வசதி படைத்தவரும் ஒன்றாக படிக்கும் வகையில் கல்வி வழங்கப்படும்.
தமிழகத்தில் விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக இருக்கிறார். அவர் பெயரளவிற்குத்தான் இருக்கிறார். எதிர்கட்சியாக இருந்து அவர் ஏதாவது பேசியுள்ளாரா? மக்களுக்காக குரல் கொடுத்துள்ளாரா? எதிர்கட்சி தலைவராவே அவரால் செயல்பட முடியவில்லை. இந்நிலையில் அவர் முதல்வராக இருந்தால் தான் என்ன செய்துவிட முடியும். மக்கள் பிரச்சனைகளை எப்படி தீர்க்கமுடியும். மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே என்று ஒரு நாடகத்தை நடத்திவருகிறார். இருப்பினும் மக்கள் அதனை காமெடியாகத்தான் பார்த்து வருகின்றனர்.
4 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் துணை முதல்வர் அப்போது அவருக்கு விவசாயிகள், நெசவாளர்கள் நிலை குறித்து தெரியவில்லையா? அதவரது தந்தையோ யாரவது கூட்டணிக்கு வாருங்கள் என கையேந்தி வருகிறார். திமுகவுடன் கூட்டணிக்கு செல்ல எந்தக் கட்சியும் தயாராக இல்லை. தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் மாற்றம் வேண்டும் என்று நினைக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களை நம்பியே பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலை சந்திக்கிறது.
அவருக்கு என்ன அம்னீசியா வந்துவிட்டதா? திமுக ஆட்சியில் இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர். திமுக தலைவர் கருணாநிதி யாரவது கூட்டணிக்கு வாருங்கள் என கையேந்தி வருகிறார். திமுகவுடன் கூட்டணிக்கு செல்ல எந்தக் கட்சியும் தயாராக இல்லை. தமிழகத்தில் இளைஞர்கள் மாற்றம் வேண்டும் என்று நினைக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களை நம்பியே பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலை சந்திக்கிறது.
முந்தைய ஆட்சியாளர்களின் தவறுகளை மக்கள் மறக்கமாட்டார்கள். அதிமுக மீது மக்கள் தற்போது கடும் கோபத்தில் உள்ளனர். நமது முதல்வர் வீட்டை விட்டு வெளியே வரவேமாட்டார். சென்னையில் வெள்ளம் வந்து ஆயிரக்கணக்கானோர் அவதிப்படும் போதுகூட அவர் வெளியே வரவில்லை. சுதந்திர இந்தியாவில் அதிகம் ஊழல் செய்தவர்கள் தான் தற்போது ஆட்சியில் உள்ளனர். இன்னும் 2 மாதம் தான் அதற்கு பின்னர் அம்மா ஆணை, பூனை என எதுவும் இருக்காது. கூடாரமே காலியாகிவிடும்.
அதிமுக கொள்ளையடித்த காசை கொடுத்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மாற்றம் தேடும் இளைஞர்களை நம்பித்தான் நான் களமிறங்கியுள்ளேன். ல கட்சிகள் கூட்டணிக்காக வாங்க வாங்க என கூவிக்கொண்டே இருக்கின்றனர். அதிமுக திமுக முடிந்துபோய்விட்டது. இன்னும் 4 பேர் கடந்த மாதம் இருந்தனர். இந்த மாதம் 3 பேர் இருக்கின்றனர். அடுத்தமாதம் தேர்தல் வரும்போது யாரும் இருக்க மாட்டார்கள். தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக அதிமுகவும், திமுகவும் மக்களை இலவசங்களை வழங்கி மக்களை சுயமரியாதை இழக்க செய்துவிட்டனர்.
பாமக கூட்டணிக்கு யார் வந்தாலும் மகிழ்ச்சிதான். யாரும் வராவிட்டாலும் மிக்க மகிழ்ச்சிதான். விஜயகாந்த் செல்லுமிடமெல்லாம் துப்பிக்கொண்டே செல்கிறார். பாமக கடந்த 4 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட போராட்டம், 8 மாநாடுகளை நடத்தி, தேர்தல் அறிக்கையை ஒரு வருடத்திற்கு முன்னரே தாயாராக வைத்துள்ளது. நாங்கள் தனித்து போட்டியிடும் முடிவை மக்களை நம்பித்தான் எடுத்துள்ளோம். எங்கள் தைரியம் யாருக்கும் வராது. 60 வயது திமுகவும், 44 வயது அதிமுகவும் தனித்து போட்டியிட தயாரா? பாமக வின் வளர்ச்சி மற்ற கட்சிகளுக்கு பயமாகிவிட்டது. பாமக ஆட்சியில் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படும்.
தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் நேர்மையான, கண்ணியமான ஆட்சி நடந்தது. அப்போது பல தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அடிப்படை கட்டமைப்புகளை காமராஜர் கொண்டுவந்தார். இதனால்தான் அனைவரும் காமராஜர் ஆட்சி வரவேண்டும், என்கிறார்கள். அந்த ஆட்சியை கொண்டு வர எனக்கு வாய்ப்பு தாருங்கள். நடித்தவர்கள் ஆண்டது போதும். இனி படித்தவர்கள் தமிழ்நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள். சினிமாவில் நடித்தால் உடனடியாக அரசியலுக்கு வந்து விடுகிறார்கள். கொள்கை, கோட்பாடு என்று எதுவும் கிடையாது. ‘கட்அவுட்‘க்கு பாலாபிஷேகம் செய்வது தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது.
இதை எல்லாம் மாற்ற, கலாசார மாற்றம் வர வேண்டும். நான் சினிமாவுக்கு எதிரானவன் அல்ல. சினிமா கலாசாரத்துக்கு எதிரானவன். நான் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தாக பூரண மதுவிலக்கை கொண்டு வருவேன். ஊழல் இல்லாத ஆட்சி அமையும். சேவை பெறும் உரிமை சட்டம், லோக் அயுக்தா கொண்டு வருவோம். இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் அன்னத்தாய், மாவட்ட துணைத்தலைவர் இசக்கிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர அமைப்பாளர் எ.பாலமுருகன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
-
மாவட்டத் தலைநகரமாக உயர்ந்துள்ள திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதுடன், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை பன்னோக்கு சிறப்பு (மல...
-
திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 67 பிறந்த நாளை முன்னிட்டும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கருமண்டபத்தில...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
அரசு மேல்நிலைப் பள்ளி கண்ணுடையான் பட்டியில் பயிலும் மாணவர்களுக்கு 1 லட்சம் ௹பாய மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அப்பள்ளி...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
0 comments:
Post a Comment