Sunday, February 21, 2016

On Sunday, February 21, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகில் திடீரென மரங்கள் கருகி வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாக மாறி உள்ளது. இதனால் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காற்றில் மாசு ஏற்படுத்தி வருகிறது. காற்றில் உள்ள மாசுவை கண்டறிவதற்கான உபகரணத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் இதுவரை அந்த பணிகள் தொடங்கப்படவில்லை.
 
இந்நிலையில் வ.உ.சி.துறைமுகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மரங்கள் அனைத்தும் சமீபகாலமாக திடீரென கருகி வருகிறது. பல ஆண்டுகளாக வளர்ந்து கம்பீரமாக காட்சி அளித்த பல்வேறு மரங்கள் இன்று காய்ந்து இலைகள் இல்லாமல் கம்புகளாக காட்சி அளிக்கிறது. அதே போன்று இரவு நேரங்களில் மின்தடையும் அதிகரித்து வருகிறது. மின்கோபுரங்களில் உள்ள இன்சுலேட்டர்கள் திடீரென சேதம் அடைந்து பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
 
இதற்கு என்.டி.பி.எல். அனல்மின்நிலையத்தில் இருந்து வெளியேறும் ரசாயண கழிவே காரணம் என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த கழிவு இரவு நேரத்தில் பனிப்பொழிவுடன் கலந்து அமிலமழையாக பெய்கிறது. இதனால் மரங்கள் கருகியும், மின்சார இன்சுலேட்டர்கள் சேதம் அடைந்தும் வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அனல்மின்நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

அவர்கள் என்.டி.பி.எல். அனல் மின்நிலைய கூலிங் டவரில் இருந்து வெளியேறும் ரசாயனம் காரணமாக அந்த பகுதி துணை மின்நிலையம், மின்தொடர் பாதையில் பாதிப்பு ஏற்பட்டு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மரங்கள் கருகி வருகின்றன. அதனை ஆய்வு செய்து நிரந்தர தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தற்போது துறைமுகத்தை சுற்றி உள்ள பகுதிகளில் மட்டும் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தூத்துக்குடி நகருக்குள் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வுகள் நடத்தி உரிய தீர்வு காணவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

0 comments: