Saturday, February 06, 2016

On Saturday, February 06, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்திருந்த வாலிபர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடியில் முதல் மற்றும் 2வது ரயில்வே கேட் அருகே  நேற்றிரவு 8 மணியளவில் வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்திருந்தாராம். அப்போது தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்வந்து கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டும் அவர் எழுந்திருக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ரயில் அந்த வாலிபர் மீது மோதியது. 

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். ரயில் அடிப்பட்டு இந்த நபர், அண்ணா நகர் 3வது தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகன் சுடலைமணி (20) என்பதும், ஆட்டோ டிரைவரான இவர் 2வது கேட் பகுதியில் ஆட்டோ ஓட்டிவந்துள்ளார். அவர் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது குடிபோதையில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தாரா? என ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

0 comments: