Saturday, February 06, 2016

On Saturday, February 06, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிருக்கு சிறு வணிகக் கடன் தலா 5 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் குழுவினரும் இந்த கடனுக்கு விண்ணப்பம் அளித்தனர். கடந்த 30 ந்தேதி இதற்கு கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு அனைத்து ஒன்றியத்தில் உள்ள யூனியன் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலர்கள் மூலம் விண்ணப்பங்கள் வாங்கப்பட்டன. ஆனால் மிக அதிகமானவர்களுக்கு கடன் வழங்கும் தகவல் கிடைக்கவில்லை. எனவே அவர்களுக்கும் நாள்களை நீடிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

இதற்கிடையில் இந்த விண்ணப்பம் நேற்று 5ந்தேதி வரை கொடுக்கலாம் என அறிவிப்பு வந்தது. ஆனால் இந்த விண்ணப்ப மனுவை யாரிடம் கொடுக்க எங்கே வாங்குகிறார்கள் என்பது தெரியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். சிலர் தூத்துகுடிக்கு நேரில் சென்றால் கடன் கிடைக்கும் என தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு படையெடுத்தனர். அங்கும் சரியான பதில் இல்லை.

இது குறித்து செய்துங்கநல்லூர் மகளிர் குழுவை சேர்ந்த நளினி கூறும்போது: சிறு வணிகக் கடன் அளிக்கவேண்டும் என்றால் அந்த தொழில் செய்பவர்களிடம் விண்ணப்பம் வாங்கி இருக்கவேண்டும். மேலும் ஆண்கள் பெண்கள் எல்லோரும் சிறுதொழில் செய்கிறார்கள். ஆனால் மகளிர் குழுவில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த கடன் என்று கூறியதால் குழுவில் இருப்பவர்களை தவிர வேறு யாரும் கடன் வாங்க விண்ணப்பம் கொடுக்கவில்லை. மேலும் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள வங்கிக்கு சென்று கோட்டால், அதற்கு வேறு விண்ணப்பம், இதற்கு வேறு விண்ணப்பம் என்று கூறுகிறார். 

இதுபோல குழப்பத்தினை தவிர்க்க மாவட்ட ஆட்சி தலைவர் இந்த கடனுக்கு விண்ணப்பம் வழங்கும் தேதியை நீடித்து, அதற்கு எப்படி எங்கே விண்ணப்பம் செய்யவேண்டும் என்று முறையாக தெளிவாக தெரிவிக்கவேண்டும். இல்லையென்றால் கடன் காலம் முடிந்துவிட்டது. இனி யாரும் யாரை நம்பியும் விண்ணப்பம் அளிக்க வேண்டாம் என்றாவது தகவல் தெரிவிக்க வேண்டும். என்று அவர் கூறினார்.

தேர்தல் களம் சூடுபிடித்து வரும் காரணத்தினால் சிறுவணிகக் கடன் உதவி திட்டத்தில் வழங்கப்படும். அதன் பின் பணம் எல்லாம் மானியமாக அறிவித்து விடுவார்கள். எனவே இந்த திட்டத்தில் எப்படியாவது இடம்பெற்று விடவேண்டும் என்று பொதுமக்கள் மும்முரமாக அழைகிறார்கள். அவர்களை ஸ்ரீவைகுண்டம் போங்கள், தூத்துக்குடி போங்கள் என அலைகழிக்க வைக்கிறார்கள். எனவே முறையான அறிவிப்பை ஆட்சிதலைவர் அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள்.

0 comments: