Thursday, April 21, 2016

On Thursday, April 21, 2016 by Tamilnewstv in    
திருச்சி 21.4.16                  சபரிநாதன் 9443086297

திருச்சி மாவட்டம் உத்தமர்கோயில் தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது 


அருள்மிகு உத்தமர்திருக்கோயில் திரக்கரம்பனூர் 108 திவ்ய தேசங்களில் 5வது தேச ஸ்தலம் பசலி 1425 (குரு பகவான் பரிகார ஸ்தலம்) பிச்சாண்டார் கோயில் கிராமம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருச்சி மாட்டத்தில் உள்ளது
திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும் 108 திருப்பதிகளுள் ஒன்றானதும் திருக்கரம்பனூர் ஆதிமாபுரம் பிச்சாண்டார்கோயில் என பிரசித்தி பெற்றதும் மும்மூர்த்திகள் முப்பெருந்தேவிகளுடன் எழுந்தருளியுள்ளதுமாகிய திருத்தலம் இந்தியாவிலேயே அருள்மிகு உத்தமர் கோயில் ஒன்றே ஆகும் அர்ச்சா ரூபியாய் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு புருஷோத்தமருக்கு ஆதியில் சத்கீர்த்திவர்;த்தனன் என்கிற சோழ அரசால் ஏற்படுத்தப்பட்ட பெருந்திருவிழா நிகழும் மன்மத வருடம் பங்குனி மாதம் 30ஆம் தேதி 12.4.16 செவ்வாய்கிழமை முதல் வருகின்ற துர்முகி வருடம் சித்திரை மாதம் 10ம்தேதி 23.4.16 சனிக்கிழமை வரை நிகழ்ச்சி நடைபெறும் அதில் இன்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றுது.

0 comments: