Tuesday, May 17, 2016

On Tuesday, May 17, 2016 by Unknown in ,    



திருப்பூர் அருகே தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட, மூன்று கன்டெய்னர் லாரிகளில் கொண்டுவரப்பட்ட ரூ.570 கோடி ரொக்கம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
 அவிநாசி அருகே சேவூரைச் சேர்ந்தவர் சிவப்பிரகாஷ். இவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோவையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமைக் கிளையின் முதன்மைத் தகவல் அதிகாரிக்கு ரூ.570 கோடி குறித்த விவரங்களைக் கேட்டு மனு அளித்துள்ளார்.
அதில், ரூ.570 கோடி தொடர்பாக ரிசர்வ் வங்கி அளித்த ஆவணங்களின் நகல், இந்தப் பணம் எங்கிருந்து, எதற்காகக் கொண்டு செல்லப்பட்டது போன்ற பணப் பரிவர்த்தனை விவரங்களைத்  தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

0 comments: