Tuesday, May 17, 2016

On Tuesday, May 17, 2016 by Unknown in ,    



தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள 15-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் சு மார் மூவாயிரத்திற்கும் அதிகமான மலைவாழ் மக்கள் உள்ளனர். மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இந்த மலைவாழ் மக்களுக்காக மாவடப்பு மலைக்
கிராமத்தில் இந்த முறை ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது.
மாவடப்பு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் மலைவாழ் மக்கள் வாக்களித்தனர்.  மேலும், கோடந்தூர் மலைக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் கோடந்தூர், ஆட்டுமலை, பொறுப்பாறு ஆகிய செட்டில்மெண்ட் கிராமங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் வாக்களித்தனர்.
 அமராவதி வனச்சரகத்துக்கு உள்பட்ட தளிஞ்சி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் தளிஞ்சி, தளிஞ்சி வயல் ஆகிய செட்டில்மெண்டுகளைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் வாக்களித்தனர்.
மேலும், குருமலை, திருமூர்த்தி மலை, ஈசல் திட்டு ஆகிய செட்டில்மெண்ட்டுகளுக்கு கீழே திருமூர்த்தி நகரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியிலும் மலைவாழ் மக்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தினர். கரட்டுப்பதி செட்டில்மெண்ட்டைச் சேர்ந்த வாக்காளர்கள் அமராவதி நகரில் வாக்களித்தனர்.

0 comments: