Tuesday, May 17, 2016

On Tuesday, May 17, 2016 by Unknown in ,    



 திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், காங்கயம் ஆகிய எட்டு சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் 10 லட்சத்து 53,486 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 51 ஆயிரத்து 70 பெண் வாக்காளர்கள், 209 இதர வாக்காளர்கள் என மொத்தம் 21 லட்சத்து 4,765 வாக்காளர்கள் உள்ளனர்.
 மொத்த வாக்காளர்களில் 15 லட்சத்து 29,818 வாக்காளர்கள மட்டுமே வாக்களித்துள்ளனர். மொத்த வாக்குப் பதிவு சதவீதம் 72.68 ஆகும்.
தொகுதி வாரியான வாக்குப் பதிவு விவரம:
தாராபுரம்: இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 38 ஆயிரத்து 16 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 81,174 பேர் வாக்களித்துள்ளனர். இதில், ஆண்கள் 91,795 பேர், பெண்கள் 89,370 பேர் அடங்குவர். வாக்குப் பதிவு 76.12 சதவீதம்.
காங்கயம்: மொத்தமுள்ள 2 லட்சத்து 33,763 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 83,211 பேர் தேர்தலில் வாக்களித்துள்ளனர். இதில், 92,156 ஆண்களும், 91 ஆயிரத்து 49 பெண்களும் வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு 78.37 சதவீதம்.
அவிநாசி: மொத்தமுள்ள 2 லட்சத்து 49,556 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 92,936 பேர் வாக்களித்துள்ளனர். இதில், 97,774 ஆண்களும், 95,162 பெண்களும்
வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு 77.31 சதவீதம்.
திருப்பூர் வடக்கு: மொத்தமுள்ள 3 லட்சத்து 29,833 வாக்காளர்களில், 2 லட்சத்து 19,129 பேர் வாக்களித்துள்ளனர். இதில், ஒரு லட்சத்து 13,729 ஆண்களும், ஒரு லட்சத்து 5,370 பெண்களும் வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு 66.44 சதவீதம்.
திருப்பூர் தெற்கு: மொத்தமுள்ள 2 லட்சத்து 47,643 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 63,619 பேர் வாக்களித்துள்ளனர். இதில், 85,662 ஆண்களும், 77,957 பெண்களும் வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு 66.07 சதவீதம்.
பல்லடம்: மொத்தமுள்ள 3 லட்சத்து 31,962 வாக்காளர்களில், 2 லட்சத்து 37 ஆயிரத்து 205 பேர் வாக்களித்துள்ளனர். இதில், ஒரு லட்சத்து 22,288 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 14,915 பெண் வாக்காளர்களும் வாக்களித்துள்ளனர்.  வாக்குப் பதிவு 71.46 சதவீதம்.
உடுமலை: மொத்தமுள்ள 2 லட்சத்து 48,615 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 81,739 பேர் வாக்களித்துள்ளனர். இதில், 90 ஆயிரத்து 918 ஆண்களும், 90 ஆயிரத்து 820 பெண்களும் வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு 73.1 சதவீதம்.
மடத்துக்குளம்: மொத்தமுள்ள 2 லட்சத்து 25,377 வாக்காளர்களில், ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 205 பேர் வாக்களித்துள்ளனர். இதில், 85,480 ஆண்களும், 85,324 பெண்களும் வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு 75.79 சதவீதம் ஆகும்.
 மாவட்டதில் உள்ள இதர வாக்காளர்கள் 209 பேரில் 40 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

0 comments: