Tuesday, May 17, 2016

On Tuesday, May 17, 2016 by Unknown in ,    




பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பனப்பாளையம் வாக்குச் சாவடியில் ஏற்பட்ட மின் தடை காரணமாக மெழுவர்த்தி வெளிச்சத்தில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
பல்லடம் நகராட்சி 8-ஆவது வார்டு பனப்பாளையத்தில் உள்ள டி.இ.எல்.சி. துவக்கப் பள்ளியில் 117-ஆவது மற்றும் 118-ஆவது வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச் சாவடிகளில் காலை 7.15 மணி முதல் காலை 8.45 மணி வரை மின் தடை ஏற்பட்டது.
ஆனாலும், வாக்குப் பதிவு பாதிக்காத வகையில் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து வாக்குப் பதிவு நடைபெற்றது. மெழுகுவர்த்தியின் குறை அளவு வெளிச்சத்தில் சிரமத்துடன் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

0 comments: