Tuesday, May 17, 2016

On Tuesday, May 17, 2016 by Unknown in ,    



அவிநாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதானக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களில் பெருபாலானவர்கள் பிற தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவரவர் சொந்தத் தொகுதிக்குச் சென்று வாக்களித்தனர்.
 அவிநாசி(தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளர் ப.தனபால், திமுக வேட்பாளர் இ.ஆனந்தன், பாஜக வேட்பாளர் சி.பெருமாள், பாமக வேட்பாளர் கே.கே.மாரிமுத்து உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில், பிரதானக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெவ்வேறு தொகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், அவரவர் சொந்தத் தொகுதிக்குச் சென்று வாக்களித்து வந்தனர். வாக்களித்து வந்ததற்குப் பிறகு அவிநாசி தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்குச் சென்று பார்வையிட்டனர்.

0 comments: