Sunday, May 22, 2016

On Sunday, May 22, 2016 by Tamilnewstv in    
திருச்சி 22.5.16       

திருச்சி இயங்கி வரும் தனியார் மருத்துவமனை பணம் வசுலிக்கும் நோக்கத்தில் செயல்பட்டதால் பொது மக்கள் முற்றுகை
முருகன் மற்றும் தனபால் விராலிமலை பகுதியை சேர்ந்தவர்கள் இருவரும் நாகமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த இருசக்கரவாகனத்தி;ல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது அவர்களில் முருகன் என்பவருக்கு காயம் ஏற்பாட்டு தனபால் முருகன் இருவரும் திருச்சி புத்தூர்   அண்ணல் காந்தி மருத்துவமனை 108 ஆம்புலென்சில் வந்துள்ளனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் தீடீரென்று முருகனை காணவில்லை சிறிது நேரம் கழித்து அவரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளதாகவும் அவருக்கு உயிருக்கு  ஆபத்து என்றும் பணம் 50000ஆயிரம் கட்டினால் தான் அவர் உயிர் பிழக்க வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவமனையில் கூறியுள்ளனர் அவருடைய உறவினர் அவரை பார்க்க அனுமதி கேட்ட பொழுது அவரை பார்க்க வேண்டுமென்றால் பணம் கட்ட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர் அதனால் முருகன் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களை காவல் துறை சமாதானப்படுத்தி முருகனை மீட்டு மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இந்த சம்பவத்தினால் உறையூர் தென்னூர் ரோட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது


பேட்டி... தனபால்

0 comments: