Tuesday, May 17, 2016

On Tuesday, May 17, 2016 by Unknown in ,    



திருப்பூர், : பனியன் தொழிலாளர்கள் வாக்களிப்பதற்காக, நேற்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து, தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்று வாக்களித்தனர். சட்டமன்றத் தேர்தலையொட்டி தனியார் நிறுவனங்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, திருப்பூரில் உள்ள அனைத்து கம்பெனிகளும் ஊதியத்துடன் விடுமுறையை அறிவித்திருந்தன. 

இதனால், பெரும்பாலான தொழிலாளர்கள், நேற்று முன்தினம் தங்கள் சொந்த ஊருக்கு வாக்களிக்க சென்றனர். நேற்று முன்தினம் முதலே பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் மதுரை, தேனி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும் வழக்கத்தை விட கூட்ட நெரிசலுடன் காட்சியளித்தது.தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல போதுமான பஸ் இல்லாததால் திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

0 comments: