Friday, May 13, 2016

On Friday, May 13, 2016 by Unknown in ,    



அவிநாசியில் அரசுப் பேருந்து மோதி துணை ராணுவ வீரர் காயமடைந்ததை அடுத்து ராணுவ வீரர்கள் பேருந்து ஓட்டுநரைத் தாக்கி, அதன் கண்ணாடி உடைத்ததால் வியாழக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது.
 அவிநாசியில், சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 65-க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், திருமண மண்டபத்தில் தங்கியுள்ளனர்.
 இந்நிலையில், துணை ராணுவ வீரர்கள் சிலர், திருமண மண்டபத்துக்கு அருகில் உள்ள தேநீர் கடைக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது, கோவையில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து துணை ராணுவ வீரரான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் மீது மோதியது. இதில், அவர் காயமடைந்துள்ளார்.
 இச்சம்பவத்தால், சுரேஷ்குமாருடன் சென்ற சக ராணுவ வீரர்களுக்கும், அரசுப் பேருந்து ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ராணுவ வீரர்கள், அரசுப் பேருந்து ஓட்டுநர் ரங்கசாமியைத் தாக்கி, பேருந்துக் கண்ணாடியையும் உடைத்துள்ளனர். இதனால், அவிநாசி-கோவை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
 பேருந்து மோதி காயமடைந்த சுரேஷ்குமார், ராணுவ வீரர்களால் தாக்கப்பட்ட பேருந்து ஓட்டுநர் ரங்கசாமி ஆகியோரை போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்துச் செந்றனர். இது குறித்து போலீஸார், இரு தரப்பினரிடமும் விசாரிக்கின்றனர்

0 comments: