Tuesday, May 17, 2016

On Tuesday, May 17, 2016 by Unknown in ,    



திருப்பூர், : 
திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பட்டாபுரத்தை சேர்ந்தவர்  சத்தியப்பிரியா (21). பி.காம்., பட்டதாரி. இவருக்கும், பனியன் தொழிலாளியான  குமரேசன் என்பவருக்கும் தொரவலூரில் உள்ள அங்காளம்மன் கோவில் திருமண  மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்தவுடன், மணமகள்  சத்தியப்பிரியா, தனது கணவர் குமரேசனுடன், வள்ளிபுரம் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு ெசய்தார். அங்கிருந்த பொதுமக்கள்  மற்றும் தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள் மணமக்களுக்கு தங்களது  வாழ்த்துகளை தெரிவித்தனர். மணமகள் சத்தியப்பிரியா கூறுகையில், முதல் முறையாக வாக்களித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

0 comments: