Friday, May 20, 2016

On Friday, May 20, 2016 by Unknown in ,    


சட்டப் பேரவைத் தேர்தலில் திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம் ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்ற சு.குணசேகரன்(திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), ப.தனபால் (அவிநாசி), கரைப்புதூர் நடராஜன் (பல்லடம்) ஆகியோர் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் வாக்கு எண்ணிக்கை மையமான  எல்.ஆர்.ஜி. கல்லூரியில் இருந்து திறந்த ஜீப்பில் ஊர்வலமாகப் புறப்பட்டு எம்ஜிஆர் சிலைக்கு வந்தனர். வெற்றி பெற்ற 4 பேரும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் சண்முகம், சட்டப் பேரவை உறுப்பினர் கருப்பசாமி, அதிமுக நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், அன்பகம் திருப்பதி, ஜெ.ஆர்.ஜான், தம்பி மனோகரன், சடையப்பன், அதிமுகத் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

0 comments: