Friday, May 20, 2016

On Friday, May 20, 2016 by Unknown in ,    


உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனுக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக உடுமலையில் அதிமுக சார்பில் வெற்றி ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஊர்வலம் தாராபுரம் சாலை வழியாக அதிமுக தலைமைத் தேர்தல் அலுவலகத்தைச் சென்றடைந்தது. இதில், உடுமலை கே.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுக அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர். அதன்பின்னர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அப்போது, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில், அவர் பேசியதாவது: இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதன் மூலமாக, கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்கு மக்கள் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். கொங்கு மண்டலத்தில் பொதுமக்கள் அதிமுகவுக்கு தங்கள் வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளனர். உடுமலைத் தொகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளில் முழு கவனம் செலுத்துவேன் என்றார்.
மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏ சி.சண்முகவேலு, உடுமலை டிஎஸ்பி விவேகானந்தன், ஆய்வாளர் தவமணி,  அதிமுக நகரச் செயலாளர் கேஜி.சண்முகம், ஒன்றிய அதிமுக செயலாளர்கள் கே.ஆறுச்சாமி, நா.அண்ணாதுரை, ஆர்.ஜி.ஜெகநாதன், நகர்மன்ற துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம் உள்ளிட்டோர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

0 comments: