Friday, May 20, 2016

On Friday, May 20, 2016 by Unknown in ,    


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளில் அதிமுகவும், இரு தொகுதிகளில் திமுக கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன.
 திருப்பூர் மாவட்டத்தில் எட்டுத் தொகுதிகளில் உள்ள மொத்த வாக்காளர்களில் 15 லட்சத்து 29,818 வாக்காளர்கள மட்டுமே வாக்களித்தனர். இது 72.68 சதவீதம் ஆகும்.
 வாக்கு எண்ணிக்கை திருப்பூர், எல்.ஆர்.ஜி. மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 இதில், மடத்துக்குளம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் மட்டும் அதிமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இதில், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வந்தனர். மடத்துக்குளத்தில் 14 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு திமுக வேட்பாளர் முன்னிலை பெற்றார். தாராபுரம் தொகுதியில் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்த அதிமுக வேட்பாளரும், இத் தொகுதியின் சட்டப் பேர உறுப்பினருமான கே.பொன்னுசாமி எட்டாவது சுற்றின்போது பின்தங்கினார்.இந்த இரு தொகுதிகள் தவிர பிற 6 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றனர்.
காங்கயம் தொகுதி: இந்தத் தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட யு.தனியரசு 83,325 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பி.கோபி 70,190 வாக்குகள் பெற்று, இரண்டாம் இடம் பிடித்தார்.
அவிநாசி (தனி) தொகுதி: இத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் ப.தனபால் 93,366 வாக்குகள் பெற்று வென்றார். திமுக வேட்பாளர் இ.ஆனந்தன் 62,692 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
திருப்பூர் வடக்குத் தொகுதி: இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.என்.விஜயகுமார் ஒரு லட்சத்து 6,717 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் எம்.பி.சாமிநாதன் 68,943 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.
திருப்பூர் தெற்குத் தொகுதி: இந்தத் தொகுதி அதிமுக வேட்பாளர் சு.குணசேகரன் 73,351 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.செல்வராஜ் 57,418 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.
பல்லடம் தொகுதி: இத்தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.நடராஜன் ஒரு லட்சத்து 11,866 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி 79,692 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
உடுமலை தொகுதி: இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ராதாகிருஷ்ணன் 81,817 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் மு.க.முத்து 76,130 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
தாராபுரம் தொகுதி: இத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வீ.எஸ்.காளிமுத்து 82,401 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கே.பொன்னுசாமி 73,308 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.
மடத்துக்குளம் தொகுதி: இந்தத் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.ஜெயராமகிருஷ்ணன் 76,619 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கே.மனோகரன் 74,952 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.

0 comments: