Tuesday, May 17, 2016
திருப்பூரில் கண்டெய்னரில் பிடிபட்ட ரூ.570 கோடி தொகையானது அரசியல் பேர பணமாக இருக்கலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திருப்பூர் மாவட்டத்தில் பிடிபட்ட, அவர்கள் கணக்குப் படி ரூ.570 கோடி குறித்த மிகக் கடுமையான ஊழலில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசுடன், முதல்வர் ஜெயலலிதா பல்வேறு வகைகளில் முயன்று அரசியல் பேரம் பேசுகிறார் என்பது மிக நம்பகமாகத் தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு இந்த மோசடிக்குத் துணை போனால், உண்மை விசுவரூபம் எடுத்து வெளியே வரும். எனவே, இன்னும் அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் கண்டெய்னர்களில் இருக்கும் பணத்தை எண்ணும்போது, நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்தான் பணம் எண்ணப்பட வேண்டும்.
அண்ணா திமுக ஊழல் அம்பலத்துக்கு வந்துவிட்டதால், திமுக ஊழல் பிரச்சினையில் தப்பிவிட்டதாக எவரும் எண்ண வேண்டாம். ஒரு இலட்சத்து எழுபத்து ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டுமின்றி, கிரானைட் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளையிலும் திமுக கற்பனை செய்ய முடியாத கோடிகள் ஊழலில் கொள்ளையடித்ததை தமிழக மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
திமுகவினரும், அண்ணா திமுகவினரும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துவிட்டார்கள். அதற்கு சரியான உதாரணம்தான் அரவக்குறிச்சி தொகுதி.
கடந்த 14-ம் தேதி மாலை முதல் இன்று காலை வரை பணம் கொடுக்கப்பட்டது. ஒப்புக்காக சில இடங்களில் பறக்கும் படை சோதனையிட்டபோது, கண்டுபிடிக்கப்பட்ட பணத்தைத் தவிர, ராஜேஷ் லக்கானி ஒட்டுமொத்தமாக பணம் கொடுப்பதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உண்மையான ஜனநாயகம் வெல்லுமா என்பது மே 19-ம் தேதி தான் தெரிய வரும். பண வெள்ளத்தை எதிர்த்து தேமுதிக -மக்கள் நலக் கூட்டணி -தமிழ் மாநிலக் காங்கிரஸ் இணைந்து அமைத்த மாற்று அரசியல் வெற்றிக் கூட்டணி ஜனநாயகத்தைக் காத்து வெற்றி பெரும் என நம்புகிறேன்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment