Thursday, May 12, 2016

On Thursday, May 12, 2016 by Unknown in ,    
சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணியை நீட்டிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழகத் தேர்தல் அதிகாரிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் அனுப்பியுள்ள கடிதம்: சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தற்போது வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், திருப்பூர் தெற்கு மற்றும் வடக்குத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து மிகவும் தாமதமாகவே பூத் ஸ்லிப்கள் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் பல பகுதிகளில் பூத் ஸ்லிப்கள் முழுமையாக வழங்கப்படாத நிலையுள்ளது. எனவே, பூத் ஸ்லிப் வழங்கும் பணியை மே 13-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: