Thursday, May 12, 2016
அதிமுகவின் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்தார்.
திருப்பூர் வடக்குத் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் மற்றும் தெற்குத் தொகுதி வேட்பாளர் க.செல்வராஜ் ஆகியோருக்கு ஆதரவு கோரி, திருப்பூரில் புதன்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கலந்து கொண்டு பேசியதாவது:
இன்றைய சூழலில் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. மழை நீரை சேமித்து வறட்சி காலங்களில் பயன்படுத்தும் கட்டமைப்புகள் நம்மிடம் இல்லாததே இதற்கு முக்கியக் காரணம். பல இடங்களில் குடிநீரை மக்கள் விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.
இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க திமுக ஏற்கெனவே அறிவித்த தமிழக நதிகளை தேசிய நதிகளுடன் இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கருணாநிதி முதல்வராக இருந்தால் மட்டுமே இதுபோன்ற பல திட்டங்களை நிறைவேற்ற முடியும். குறிப்பாக திமுகவால் மட்டுமே மதுவிலக்கை அமல்படுத்த முடியும். ஆனால், அதிமுக படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கூறியுள்ளது. அதிமுகவின் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாறக் கூடாது.
திமுக ஆட்சிக்கு வந்தால் பால் விலையைக் குறைப்பது, மாதம் ஒருமுறை மின் கட்டணம், கல்விக் கடன் ரத்து, விவசாயப் பயிர்க் கடன் முழுவதுமாக ரத்து, முதியோர் உதவித் தொகை ரூ.1000-லிருந்து, ரூ.1300-ஆக அதிகரிப்பு மற்றும் அரசுப் பள்ளிகளில் உள்ள 54,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.
இதில், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் ம...
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கு மற்றுமோர் நவீன கருவி அறிமுகம். ஹர்ஷமித்ரா மருத்துவமனை கடந்த 12 ஆண்டுகளாக திர...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment