Monday, August 15, 2016
On Monday, August 15, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
15.08.16 சபரிநாதன்
9443086297
திருச்சிராப்பள்ளியில்
நடைபெற்ற சுதந்திர
தின விழாவில்
ரூபாய்
18 இலட்சம் மதிப்பில்
நலத்திட்ட உதவிகளை
மாவட்ட
ஆட்சித்தலைவர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.
-------------------
திருச்சிராப்பள்ளியில்
நடைபெற்ற சுதந்திர
தினவிழாவில் 135 பயனாளிகளுக்கு ரூபாய்
1796232 மதிப்பிலான
நலத்திட்ட உதவிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.பழனிசாமி அவர்கள் வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி
மாவட்ட ஆயுதப்படை
மைதானத்தில் மாவட்ட
நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற
சுதந்திர தின
விழாவில் மாவட்ட
ஆட்சித்தலைவர் கே.எஸ்.பழனிசாமிஇ.ஆ.ப. அவர்கள்
இன்று (15.08.2016) காலை
9.32 மணிக்கு தேசியக்
கொடியை ஏற்றி
வைத்து வண்ணப்
பலூன்கள் வெண்புறாக்களை
பறக்கவிட்டார்கள். இதனைத்
தொடர்ந்து திறந்தவெளி
ஜீப்பில் மாவட்ட
காவல் கண்காணிப்பாளர்
செந்தில்குமார்இ.கா.ப. அவர்களுடன்
சென்று காவல்துறையினரின்
அணிவகுப்பு மரியாதையை
ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து
நாட்டின் விடுதலைக்காக
பாடுபட்ட தியாகிகள்
மற்றும் அவர்களது
குடும்பத்தினர்களுக்கு பொன்னாடை
அணிவித்து நினைவு
பரிசுகளையும் வழங்கி
கௌரவித்தார்கள்.
அதன்
பின்னர் காவல்துறையில்
சிறப்பாகப் பணியாற்றிய
5 காவல்துறையினருக்கும் காவல்துறையில்
நற்பணி சான்று
66 காவலர்களுக்கும்ää
25 ஆண்டுகள் மாசற்ற
பணிபுரிந்த ஊரகவளர்ச்சித்துறையைச்
சார்ந்த 14 அரசு
ஊழியர்களுக்கும் ஊரக
வளர்ச்சித்துறையில் சிறந்த
முறையில் ஈப்பு
ஒட்டுநராக பணிபுரிந்தமைக்காக
3 நபர்களுக்கு தங்க
பதக்கமும் மருத்துவத்துறையில்
108 ஆம்புலன்ஸில் சிறப்பாக
பணியாற்றிய 6 நபர்களுக்கும்ää
பெல் செல்வராஜ்
என்பவர் கண்தானத்தை
சிறந்த முறையில்
ஊக்குவித்தமைக்காக பாராட்டுச்
சான்றிதழும் குடும்பநல
அறுவை சிகிச்சையில்
சிறப்பாக பணியாற்றிய
6 மருத்துவர்களுக்கும் கால்நடை
பராமரிப்புத்துறையில் சிறப்பாக
பணிபுரிந்த 1 நபருக்கும்ää
பாராட்டுச் சான்றிதழ்கள்
வழங்கப்பட்டது.
மேலும்
முன்னாள் படைவீரர்
நலத்துறையின் சார்பில்
12ம் வகுப்பு
பொதுத்தேர்வில் முதல்
இரண்டு இடங்களைப்
பெற்ற இரண்டு
மாணவ மாணவிகளுக்கு
பரிசுத் தொகையும் வருவாய் துறையின்
சார்பில் முதலமைச்சரின்
உழவர் பாதுகாப்பு
திட்டத்தின் கீழ்
திருமண நிதியுதவி
15 நபர்களுக்கும் சமூக பாதுகாப்பு
திட்டத்தின் கீழ்
திருமண நிதியுதவி
12 நபர்களுக்கும் நலிந்தோர் நலத்திட்ட
நிதியுதவி 2 நபர்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் நிதியுதவி
3 நபர்களுக்கும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள்
நலத்துறையின் சார்பில்
10 நபர்களுக்கு உதவித்தொகையும் தோட்டக்கலைத்துறையின் சார்பில்
வெங்காய சேமிப்பு
கிடங்கு அமைக்க
2 நபர்களுக்கு உதவித்தொகையும் வேளாண்மைத்துறையின் சார்பில்
பாட்டரியினால் இயங்கும்
கைத்தெளிப்பான் 1 நபருக்கும் தென்னங்கன்று நெட்டை
ரகம் 2 நபருக்கும் உளுந்து 3 நபருக்கும் குறுவை தொகுப்பு
திட்ட இயந்திர
நடவு பின்னேற்பு
மானியம் 2 நபர்களுக்கும் மாவட்ட பிற்பட்டோர்
மற்றும் சிறுபான்மையினர்
நலத்துறையின் சார்பில்
13 நபர்களுக்கு உதவித்தொகையும் மாவட்ட ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர்
நலத்துறையின் சார்பில்
4 நபர்களுக்கு தையல்
இயந்திரமும் மகளிர்
திட்டம் சார்பில்
16 நபர்களுக்கு தனிநபர்
கடன் வழங்குதல் 34 நபர்களுக்கு மகளிர்
சுய உதவிக்குழுக்களின்
ஆதாரநிதி வழங்குதல் மாவட்ட சமூக
நல அலுவலகம்
சார்பில் 14 நபர்களுக்கு
பெண் குழந்தை
பாதுகாப்பு திட்டத்தில்
உதவித்தொகையும் என மொத்தம்
135 நபர்களுக்கு ரூ.17
இலட்சத்து 96 ஆயிரத்து
232 ரூபாய் மதிப்பிலான
நலத்திட்ட உதவிகள்
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்களால் வழங்கப்பட்டது.
சுதந்திர
தின விழாவையொட்டி
கலைநிகழ்ச்சிகள் நடைபெற்ற
பள்ளிகள் தெப்பக்குளம்
புனித சிலுவை
பெண்கள் மேல்நிலைப்பள்ளி வேங்கூர் செல்லம்மாள்
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பொன்மலைப்பட்டி டாலர்ஸ்
காது கேளாதோர்
உயர்நிலைப்பள்ளி டவுன்ஹால் அரசு
பெண்கள் மேல்நிலைப்பள்ளி சமயபுரம் எஸ்.ஆர்.வி.மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளி அரியமங்கலம் சியர்ஸ்
சிறப்பு பயிற்சி
மையம் திருச்சிராப்பள்ளி
எஸ்.வி.எஸ்.
இந்து பெண்கள்
மேல்நிலைப்பள்ளி கைலாசபுரம் பாய்லர்
பிளாண்ட் பெண்கள்
மேல்நிலைப்பள்ளி திருச்சிராப்பள்ளி கலைக்காவேரி
நாட்டியப்பள்ளி திருப்பராய்துரை விவேகானந்தா
வித்யாவனம் உயர்நிலைப்பள்ளி
ஆகிய பள்ளி மற்றும்
கல்லூரி மாணவ மாணவிகளின் கண்கவர்
கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கலைநிகழ்ச்சியில் பங்குபெற்ற
805 மாணவ மாணவிகளை பாராட்டி
பரிசுகளும் பள்ளி
நிர்வாகத்திற்கு பாராட்டு
கேடயங்களும் மாவட்ட
நிர்வாகத்தின் சார்பில்
வழங்கப்பட்டது.
முன்னதாக
சுதந்திர தினவிழாவையொட்டி
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் காலை
9.10 மணிக்கு காந்தி
மார்க்கெட் அருகில்
உள்ள போர்
நினைவுச் சின்னத்தில்
மலர் வளையம்
வைத்து மரியாதை
செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் திரு.மஞ்சுநாதாஇ.கா.ப. மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.வரதராஜன்இ.கா.ப. சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.அருண்இ.கா.ப. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார்இ.கா.ப. மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) திரு.மயில்வாகனன்இ.கா.ப. மாநகர காவல் துணை ஆணையர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) திரு.பிரபாகரன்இ.கா.ப. முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.என்.ஆனந்தி வேளாண்மைத்துறை இணை இயக்குனர் திரு.சந்திரசேகரன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் திருமதி.வே.சுப்பு (பொது) திருமதி.சாந்தி (வேளாண்மை) வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.கணே~;குமார் (திருச்சிராப்பள்ளி) ஏ.ஜி.ராஜராஜன் (ஸ்ரீரங்கம்) மாவட்ட ஊராட்சித் தலைவர் டி.ராஜாத்தி வட்டாட்சியர்கள் திருமதி.செல்வமதி திரு.ரெங்கராஜன் திரு.சிவசங்கரன்; மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் அனைவரும் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 10.4.16 சபரிநாதன் 9443086297 மீண்டும் முதல்வாராவர் ஜெயலலிதா திருச்சி ஸ்ரீரங்கம் ஜீயர் வாழ்த்து திருச்ச...
-
இந்திய பூர்வீகத்தை கொண்ட ஒருவரின் பெண், உலக ஜப்பான் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜப்பானில் கலப்பின பெண் ஒருவர், உலக ஜப்பான் அழகியாக த...
-
வீரபாண்டி,திருப்பூர் அருகே குடும்ப தகராறில் அண்ணணை அடித்து கொன்ற 3 தம்பிகளை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவத...
-
ஆப்பிரிக்க நாடுகளில் சமீப காலமாக பரவி வரும் எபோலா வைரஸ் தாக்குதலினால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நோயின் தாக்கம் இந்தியாவிலும...
-
தமிழ்நாடு மேனிலைப்பள்ளி தொழிற்பள்ளி ஆசிரியர் கழகம் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்கல்வி ஆசிரியர்கள் கவனஈர்ப்பு போரட...
-
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை...
-
திருப்பூர் அருகே, செட்டிபாளையம் பகுதியில் வீடு புகுந்து மர்ம நபர்கள் தாக்கியதில் திமுக பிரமுகர், அவரது மனைவி, மகன் கொலை செய்யப்ப...
-
மதுரை சிக்கந்தர் சாவடியை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மனைவி வனிதா (வயது34), இவருக்கு ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பாண்டிச்செல்வி என்பவர் தோழியான...