Sunday, September 18, 2016

On Sunday, September 18, 2016 by Tamilnewstv in
திருச்சி 18.9.16               

திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் மேம்பால பணிகள் துவங்கும் முன்பே அணுகுசாலையை அமைத்து அதை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடாமல் மக்களை கடும் அவதிக்குள்ளாக்கிவிட்டனர். தற்போது அணுகுசாலை பணிகள் முடிவடைந்த நிலையிலும் அதிகாரிகள் அலட்சியத்திலும் மெத்தனத்தாலும் அது மக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை.ஆதலால் பொதுமக்களை ஏளனமாக நினைக்கும் அதிகாரிகளை கண்டித்தும் உடனே மேம்பால அணுகுசாலையை திறக்க வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் வணிகர் சங்க பேரமைப்பு கோவிந்தராஜ் டெக்கான் நுகர்வோர் கழக தலைவர் பாரதராஜா ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கம் தலைவர் மோகன்ராம் திருவரங்க வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சிதம்பரம் கருப்பையா ரெங்கநாதன் வழக்கறிஞர் சாரங்கபாணி ஆம்ஆத்மி கட்சி தலைவர் கருப்பையா கொண்டையாம்பேட்டை விவசாயிகள் சங்கம் சார்பில் சின்னதுரை பாலமுருகன் விஸ்வலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்