Wednesday, November 02, 2016

On Wednesday, November 02, 2016 by Tamilnewstv in    
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்50   கைது. 
திருச்சி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை வறட்சி மாநிலமாக அறிவித்தது போல தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று இந்த போராட்டத்தின்போது வலியுறுத்தபட்டது. மேலும் குறுவை, சம்பா, வாழை விவசாயிகள  தண்ணீரின்றி பாதிக்கபட்ட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் முழக்கமிட்டனர். கரும்பு விவசாயிகளுக்கு 50,000 ரூபாயும், வாழை விவசாயிகளுக்கு 1 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொதுப்பணி துறை அதிகாரிகளும் காவல் துறையினரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிட மறுத்த விவசாயிகள் தலைமை பொறியாளர் அலுவலகத்திற்குள் தரையில் படுத்துக்கொண்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 50 கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்

0 comments: