Tuesday, November 01, 2016

On Tuesday, November 01, 2016 by Tamilnewstv in    
திருச்சி 1.11.16
திருச்சி சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா திருச்சி மாவட்டத்தின் சார்பில் ஜெஎன்யு நஜீப் அகமது காணமல் போனதை கண்டுபிடிக்கத்தவறிய காவல் துறையை கண்டித்தும் அதற்கு காரணமான பாஜாக அரசை கண்டித்தும் திருச்சி ராமகிருஷ்ணா தியேட்டர் மேம்பாலம் அருகே; நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்
அப்போது திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா கூறுகையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் நஜீப்அகமது மத்திய பாஜாக அரசுக்கும் அதன் மாணவரணி அமைப்பான எபிவிபி க்கும் எதிராக குரல் கொடுத்ததன் காரணமாக பாஜகாவின் மாணவரணி அமைப்பான எபிவிபி குண்டர்களால் தாக்கப்பட்டு மேலும் அவர் 15 நாட்களாக ; காணவில்லை காவல்துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்க வில்லை அதனை கண்டிக்கும் வகையிலும் பாஜாக மாணவரணி அமைப்பான எபிவிபி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரியும் இந்த ஆர்பாட்டம் என தெரிவித்தார்.
காவல் துறை அனுமதி மறுக்கப்பட்ட ஆர்பாட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் ஹஸ்ஸான்  கண்டன உரையாற்றினார் மாவட்ட பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேட்டி மாவட்; தலைவர் சபியுல்லா

0 comments: