Sunday, November 13, 2016
On Sunday, November 13, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 13-11-2016
தமிழகத்தில் உழவு கருவிகள் வாங்கியதில் 44 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது என்று திருச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
திருச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது…..உழவு கருவிகள் வாங்கியதில் மிகபெரிய அளவில் அதாவது 44 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. இதில் 38 கோடி ரூபாய் அமைச்சர்களுக்கு போனதாக கூறப்படுகிறது. மின்
துறையில் தொடர்ந்து ஊழல் நடைபெற்று வருகிறது. இது குறித்து புள்ளிவிவரத்துடன் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளேன். எந்த பலனும் இல்லை. தமிழகத்தில் 85 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர். ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான ஏராளமான ஏதுவும் நிறைவேற்றப்படவில்லை. காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும். விவசாய சங்கங்கள் அவ்வப்போது விளம்பரத்திற்காகவும்ää வியாபாரத்திற்காகவும் போராட்டம் நடத்துகின்றனர் என்று கூறிய அவர் தொடர்ந்து கூறும்போது…….. தமிழக அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறதா என்ற கேள்வியை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கேட்டுள்ளார். இதற்காக தான்ää நான் தொடர்ந்து வெள்ளை அறிக்கை வெளியிட கேட்டு வருகிறேன். தமிழக அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. நடப்பு ஆண்டில் தமிழகத்தில் நிதி பற்றாக்குறை 45 கோடி அதிகரித்து உள்ளது. இது நல்ல நிர்வாகத்திற்கான அறிகுறி அல்ல. தன்மானத்தை விலைபேசிடும் தேர்தலாக இடைத்தேர்தல் வந்துள்ளது. மக்கள்; என்ன செய்ய போகிறார்கள். மக்கள் இரண்டு கட்சிக்கும் வாக்களிக்க கூடாது. விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போடும் பாமகவிற்கே வாக்களிக்க வேண்டும். கருப்பு பணத்தை தடுக்கும் வண்ணமாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை மூலமாக மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். நல்ல தயாரிப்புடன் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கலாம். இரவு பகலாக வங்கிகளை இயங்க செய்திருக்கலாம் என்று கூறிய அவர் இறுதியாக திமுகவும்ää அதிமுகவும் ஒழிந்தால்தான் நாட்டிற்கு விடிவு காலம் என்று கூறினார். பேட்டியின் போது பாமக தலைவர் ஜி.கே.மணி மாவட்ட தலைவர் வினோத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பேட்டி
ராமதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்காகவும் அமராவதி அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர் மு....
-
தமிழக-கேரள எல்லையில் உள்ள உடுமலை வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியுள்ளனரா என க்யூ பிரிவு போலீஸார், வனத் துறையினர் தீவிர விசாரணை...
-
The 10 th mid-year Chemical Research Society of India (CRSI) Symposium in Chemistry was jointly organized by National Ins...
-
திருச்சி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மண்டல சாலை மறியல் போராட்டம் நடை...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
கர்நாடக உயர் நீதிமன்றம்| கோப்புப் படம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 1991-96 காலக்கட்டத்தில் ஹைதராபாத் திராட்சை தோட்டம் மூலம...
0 comments:
Post a Comment