Thursday, December 15, 2016

On Thursday, December 15, 2016 by Unknown in    

திருப்பூர்,இந்தியாவில் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் ஆளும்கட்சி ஆதரவோடு இருக்கிறார்கள் என்று திருப்பூரில் தா.பாண்டியன் கூறினார்.கருத்தரங்கம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் யுகப்புரட்சியின் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் திருப்பூர் மங்கலம் ரோடு கே.ஆர்.சி. சிட்டி சென்டர் வளாகத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கருத்தரங்குக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர் ரவி தலைமை தாங்கினார்.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன், மாநில துணை செயலாளர் சுப்பராயன், மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுவுடைமை குறித்து பேசினார்கள்.கருத்தரங்கம் முடிந்ததும் தா.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:–பயிர்கள் கருகி விட்டது

தமிழ்நாட்டில் பருவம் தவறிய மழையால் கிராமம், நகரங்களில் குடிநீருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அனைத்தும் கருகி விட்டன. எனவே கையில் இருந்ததையும் இழந்ததன் காரணமாக கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். எனவே விவசாயிகளின் தற்கொலையை தடுக்க முன்கூட்டியே திட்டமிட வேண்டிய பொறுப்பு புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு உள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.வெள்ளத்தால் சேதம் ஏற்பட்டாலும், பயிர்கள் கருகி போனாலும் மத்திய அரசு ஒரு குழுவை அனுப்புகிறோம் என்பார்கள். அவர்கள் பார்வையிட்டு சென்று விடுவாடுவார்கள். அதன்பிறகு அவர்கள் அறிக்கை கொடுப்பார்கள். அதில் எவ்வளவு நிவாரணம் வந்தது என்பதெல்லாம் தெரியாது. இது வாடிக்கையாகி விட்டது. எனவே மத்திய அரசு இந்த குழுக்களை நியமிப்பது என வாடிக்கையான மழுப்பல் வேலைகளை செய்யாமல், வறட்சியை எதிர்கொள்வதற்கு மத்திய அரசும், மாநில அரசும் முழு மூச்சாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாய கடன்கள்

முதல் நடவடிக்கையாக விவசாயிகளிடம் ஒரு வருடத்துக்கு விவசாய கடன்களை வசூலிக்க கூடாது. இதற்கான அறிவிப்பை அரசு உடனே வெளியிட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தும் இயக்கங்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சி உடனடியாக தொடங்கும்.கருப்பு பணம்

கருப்பு பணம் வேட்டையாடுவதில் பிரதமர் மோடி இறங்கி உள்ளார். இந்தியாவில் மக்கள் படும் துயரத்தை பார்த்தால் அவர் அறிவித்த அறிவிப்பின் லட்சியத்தை அவர் அடையப்போவதில்லை. புதிய ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். களில் கிடைப்பதில்லை. ஆனால், தனியாரிடம் ரூ.100 கோடி, ரூ.200 கோடி பிடிபட்டு இருக்கிறது என்றால் அரசாங்கத்தால் அச்சிடப்படும் பணம், ரிசர்வ் வங்கியால் வினியோகிக்கப்படும் பணம் எப்படி தனியாருக்கு கிடைத்தது என்பதை மத்திய அரசு விசாரிக்க வேண்டும்.கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் ஆளும்கட்சி அரவணைப்போடு, ஆதரவோடு இருக்கிறார்கள் என்பது அம்பலமாகியுள்ளது. கருப்பு பணம் வைத்து இருப்பவர்களை கண்டு பிடிக்க வேண்டும். ஆனால் மக்களை இப்படி வாட்டி வதைக்கக்கூடாது.ஒத்துழைக்க வேண்டும்

மத்திய அரசு என்பது ஜனநாயகத்தின் பெயரால் சர்வாதிகார புகுத்துதலை மாநில அரசுகளிடம் செய்து வருகிறது. மாநில அரசின் உரிமைகளை பாதுகாப்பதில் அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: