Thursday, December 15, 2016

On Thursday, December 15, 2016 by Unknown in    

குண்டடம் குண்டடம் பகுதியில் வீசிய பலத்த சூறாவளிக்காற்றால் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோளப்பயிர்கள் வேருடன் சாய்ந்தன.சூறாவளி காற்று

சென்னையில் நேற்று முன்தினம் கரையை கடந்த வார்தா புயல் சென்னையை புரட்டிப்போட்டது. அதே நேரம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதுடன், அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. அதேபோல் குண்டடம் பகுதியிலும் பனித்துளிகளைப் போன்ற சாரல் பெய்தது. அப்போது பயங்கர சூறாவளிக்காற்று வீசியது.இந்தக் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மேட்டுக்கடை, முத்துக்கவுண்டம்பாளையம், சந்திராபுரம், நந்தவனம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது கதிர் தள்ளிய நிலையில் இருந்த மக்காச் சோளப்பயிர்கள் வேருடன் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தது மட்டுமின்றி இந்த போகமே வீணாகிப் போனதாக கவலை தெரிவிக்கின்றனர். மேலும் ஆங்காங்கே மரங்கள் விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன.இது குறித்து தும்பலப்பட்டியை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் கூறியதாவது:–இழப்பீடு வழங்க வேண்டும்

இந்த போகத்தில் 2 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிர் செய்திருந்தேன். மழை பொய்த்துப் போய் ஓரளவுதான் விளைந்திருந்தது. இந்த நிலையில் சூறாவளிக்காற்றால் மொத்த மக்காச்சோள பயிரும் சாய்ந்து விட்டன. இதனால் சுமார் ரூ.1.20 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டடம் பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த மக்காச்சோளம் சாய்ந்து விட்டன.

0 comments: