Wednesday, December 21, 2016

On Wednesday, December 21, 2016 by Tamilnewstv in    
திருச்சி 21.12.16
திருச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு ஆசிரியர்கள் பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தினர்




மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி  ஆசிரியர் கூட்டணி திருச்சி நகரம் தமிழ்நாடு தனியார் பள்ளி  ஆசிரியர் அலுவலர் கழகம் திருச்சி நகரம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு திருச்சி நகரம் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் திருச்சி நகரம் சார்பில் தமிழ்நாடு தொடக்கப்;பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி மாவட்ட செயலாளர் நீலகண்டன் தலைமையில் வெஸ்ட்ரி பள்ளி அருகில் உள்ள மேஜர் சரவணன் நினைவிடத்திலிருந்து ஆசிரியர்கள் ஆசிரியைகள்  பேரணியாக மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் அருகே வந்து அஞ்சலி செலுத்தினர்

அப்போது மாவட்ட செயலாளர்  கூறுகையில் மாணவ மாணவியர்களுக்கு சிறப்பான திட்டங்களை வகுத்து கொடுத்தவர் அம்மா அவர்களுக்கு மாணவ மாணவியர் மிகவும் கடமைபட்டுள்ளனர் என்றும் எங்களுக்கு ஊதிய குழு அமைத்து எங்களது பிரச்சனையை நிரந்தர தீர்வுகான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கும்போது முதல்வர் இறந்தது மிகவும் வேதனையும் மனவருத்ததையும் தருகிறது என்றும் எங்களுக்கு தமிழக அரசு தீர்வுகாண வழி வகுக்கவேண்டுமென்றார்

பேட்டி நீலகண்டன்







0 comments: