Thursday, December 15, 2016

On Thursday, December 15, 2016 by Unknown in    


திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் அந்த பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார். இவருக்கு அவினாசி ரோட்டில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியின் எஸ்எஸ்ஐ கிளையில் சேமிப்பு கணக்கு உள்ளது. இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி மாலை ஜீவானந்தத்தின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது எதிர்முனையில் பேசிய பெண் “ பாங்க் ஆப் பரோடவில் இருந்து பேசுவதாகவும் உங்களுடைய ஏ.டி.எம். எண் காலாவதியாகி விட்டதாகவும், ஏ.டி.எம். கார்டு எண்ணின் கடைசி 4 இலக்க எண்ணை தெரிவிக்குமாறு உள்ளார்.

இதை நம்பி ஜீவானந்தமும் அந்த பெண்ணிடம் 4 இலக்க எண்ணை கூறி விட்டார். அந்த பெண் செல்போன் இணைப்பை துண்டித்த 10 நிமிடத்தில் ஜீவானந்தத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரத்து 500 பணம் குறைந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜீவானந்தம் இதுதொடர்பாக வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார். ஆனால் வங்கியில் இருந்து யாரும் பேசவில்லை என்பது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

மேலும் ஜீவானந்தத்தின் ஏ.டி.எம். கார்டு எண்ணை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் அதை பயன்படுத்தி அவருடைய வங்கி கணக்கில் இருந்த பணத்தை மோசடி செய்து அந்த பணம் மூலமாக ஆன்லைனில் பொருட்கள் வாங்கியதும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ஜீவானந்தம் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக 15 வேலம்பாளையம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களுடைய செல்போனுக்கு வரும் அழைப்புகளில் எதிர்முனையில் பேசும் நபர்கள் வங்கி மேலாளர் பேசுவதாக கூறி ஏ.டி.எம். எண்ணை வாங்கி வங்கி கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று போலீசார் அந்த செய்தி குறிப்பில் கூறி உள்ளனர்

0 comments: