Saturday, January 28, 2017

On Saturday, January 28, 2017 by Tamilnewstv in    
*திருச்சி  மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில்  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.*


*திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாதம் தட்டமை, ரூபல்லா அம்மை நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.*

இந்தியாவில் தட்டம்மை, ரூபல்லா அம்மை நோய்களால் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைப்படி, மத்திய சுகாதாரத் துறை, நாடு முழுவதும் உள்ள 10 மாத குழந்தைகள் முதல் 15 வயது சிறுவர், சிறுமிகள் வரை அனைவருக்கும் தட்டம்மை, ரூபல்லா அம்மை நோய் வராமல் தடுப்பதற்கான புதிய தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கோவா, லட்சத்தீவு ஆகிய 5 மாநிலங்களில் முகாம் நடத்தி, தடுப்பூசி போடப்பட உள்ளது.
தமிழகத்தில் தட்டம்மை, ரூபல்லா அம்மை நோய்களுக்கான தடுப்பூசி முகாம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.
அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் புதிய தடுப்பூசி போடப்படும். இந்த முகாமில் திருச்சி  மாவட்டத்திலும் சுமார் 8 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
ரூபல்லா அம்மை நோய் பெண்களை அதிகம் பாதிக்கிறது. இந்த அம்மை நோயால் கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டால், பிறக்கும் குழந்தைக்கு காது கேட்காமலும், கண் புரை பாதிப்பாலும், இதய நோய்களுடன் பிறப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே, இந்த தடுப்பூசியை போடுவதன் மூலம் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார். இந்தி நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்ல மண்டி , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் உடன் இருந்தனர்.

0 comments: