Saturday, February 18, 2017

On Saturday, February 18, 2017 by Tamilnewstv in    
திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான முக ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து 

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டம். கொடும்பாவியும் எரிக்க முயற்சி :
முதல்வர் பதவிக்கான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது  ரகசிய வாக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தமிழக எதிர் கட்சி தலைவர மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினர் வற்புறுத்தியதை தொடர்ந்து நடைபெற்ற பிரச்சனையில் மு.க.ஸ்டாளினை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றியதுடன் அவரது சட்டையையும் கிழித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருச்சியில்திமுகவினர் சபாநாயகர் தனபால் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் திருச்சி ஸ்ரீரங்கம் திருச்சி திருவெறும்பூர் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல் திருச்சிஉள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

0 comments: