Sunday, April 23, 2017

On Sunday, April 23, 2017 by Tamilnewstv in    
எலும்பு மூட்டு காயத்திற்கான சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் மருத்துவ கருத்தரங்கு 
டெல்டா மாவட்டத்தில் முதல் முறையாக திருச்சி மாநகரில்!
எலும்பு மூட்டு காயத்திற்கான சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் மருத்துவ கருத்தரங்குஇ டெல்டா மாவட்டத்தில் முதல் முறையாக திருச்சி மாநகரில்இ 23 ஏப்ரல் 2017 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்று மதுரை மண்டலா அப்போலோ மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி மருத்துவர் ரோகிணி ஸ்ரீதர் அவர்கள் தனது சிறப்புரையில் விபத்து மற்றும் எலும்பு மூட்டு காயத்திற்கான சிகிச்சைகளின் முன்னேற்றம் மற்றும் அதன் அவசியத்தையும் இத்துறையில் திருச்சி அப்போலோ சிறப்பு எவ்வாறு முன்னோடியாக திகழ்கிறது என விளக்கமளித்தார். இதற்க்கு பின் மருத்துவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேசிய மருத்துவர்கள் இத்துறையின் முன்னேற்றங்கள் மற்றும் எத்தகைய அசாதாரண சூழ்நிலைகளும் கையாண்டு நோயாளிகளை நல்ல நிலைக்கு கொண்டு வரமுடியும் என்று கலந்துரையாடல் மூலம் எடுத்து கூறினார்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து திரு.  நல்லுசாமி அன்னாவிஇ சர்வதேச உயரம் தாண்டுதல் வீரர் மற்றும் தேசிய பயிற்சியாளர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மற்ற விருதினர்களுடன் குத்துவிளக்கு ஏற்றி எலும்பு மூட்டு காயத்திற்கான சிறப்பு சிகிச்சை மையத்தை தொடங்கி சிறப்புரை ஆற்றினார். உடன் மருத்துவர் எஸ். ரமேஷ் பாபுஇ தலைவர் - தமிழ்நாடு ஆர்த்தோ சங்கம் மற்றும் மற்ற மருத்துவர்களும் பங்கேற்றனர். தொடர்ந்து திரு. நல்லுசாமி அன்னாவிஇ மருத்துவர். எஸ். ரமேஷ் பாபு ஆகியோர் இந்நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் அவசியத்திற்க்கான முக்கியத்துவத்தை பற்றி உரையாற்றினார்கள். 
திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை துணை மருத்துவ இயக்குனர் மருத்துவர் ஆர். சாந்தி அவர்கள் மருத்துவ கருத்தரங்கை நடத்திய திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை விபத்து மற்றும் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் மருத்துவர். சாம்சன் டேனியல்இ மருத்துவர். கே. பாலசுப்ரமணியன்இ மருத்துவர். அருண் கீதையின் மற்றும் விபத்து மற்றும் இருதயம் என்ற தலைப்பில் பேசிய இருதய சிறப்பு நிபுணர் மருத்துவர். காதர் சாஹிப் அவர்கள்  உடன் பேசிய மருத்துவர். கே.ஜி. சீனிவாசன்இ கதிரியக்க மருத்துவர்இ மதுரை மற்றும் மருத்துவர்.  எஸ். ரமேஷ் பாபு சென்னை  ஆகியோர்களை நன்றிபாராட்டினர்இ நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு  பெற்றது.
இந்நகழ்ச்சியில் விபத்து மற்றும் எலும்பு மூட்டு காயம் மற்றும் பாதிப்பிற்கான சிகிச்சை முன்னேற்றம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து கலந்தாலோசித்தனர்.

0 comments: