Sunday, May 21, 2017

On Sunday, May 21, 2017 by Tamilnewstv in    
திருச்சி 21.5.17
திருச்சியில் பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கத்தின் மண்டல மாநாடு  மற்றும் அதில் பாணியாற்றிய பொதுச்செயலாளர் தமிழ்வேல் பணி நிறைவுப்பாராட்டு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தி;ல் நடைபெற்றது
மாநாட்டிற்கு சென்னை வட்டார பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கத்துணைதலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். திருச்சி மண்டலத்துணைப்பொதுச்செயலர் தமிழ்ச்செல்வன் வரவேற்புரையாற்றினார்.ஊழியர் சங்க முன்னாள் பொதுச்செயலர்கள் வேணுகோபால ரெட்டி பாஸ்கரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.அதிகாரிகள் சங்க மண்டலச் செயலர் அசோக் ஊழியர் சங்க துணைப்பொதுச்செயலர் ஜெகநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநில பொதுச்செயலர் சிங்கார  வேலு விழாப்பேருரை ஆற்றினார். வங்கி எதிர் கொள்ளும் சவால்கள் குறித்தும் சங்கத்தின் முன் உள்ள பிரச்சனைகள் குறித்து அரசின் ஊழியர் விரோத நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்

இறுதியாக சங்க மண்டல துணைப்பொதுச்செயலர் தமிழ்வேள் ஏற்புரை ஆற்றினார்.திருச்சி மண்டல உதவிப்பொதுச்செயலர் கணேசமூர்த்தி நன்றி கூறினார். மாநாட்டில் திருச்சி மண்டலம் முழுவதிலும் இருந்து 300 பெண்கள் உட்பட 1000 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

0 comments: