Saturday, August 05, 2017

On Saturday, August 05, 2017 by Tamilnewstv in ,    
தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் விழா

யுனைடெட் எக்கனாமிக் போரம் மற்றும் எம்.ஏ.எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து “தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் விழா – ஐபுNஐவுநு -2017” என்கின்ற தலைப்பில் 05.08.2017 அன்று கல்லூரியிலுள்ள நியூட்டன் அரங்கத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. இவ்விழாவினை கல்லூரியின் தாளாளர் முனைவர் எம்.ஏ. மாலுக் முகமது மாஸ்டர் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஸன்ஸ் அவர்கள் வரவேற்புரையுடன் விழாவை துவக்கி வைத்தார். இவ்விழா மூன்று பிரிவுகளாக பிரித்து தொகுத்து வழங்கப்பட்டது. முதல் பிரிவில் முனைவர் லோகேஷ் போரிக்கௌடா – சாம்ஸங் ஆர் ரூ டி இன்ஸ்டிடியூட்  இந்தியாவின் மூத்த தலைவர்  தொழில் முனைவோருக்கான புதிய கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். மேலும் அவர் மற்றவர்களிடம் இருந்து தனித்து சிறப்பாக செயல்படுவதை பற்றியும் தனித்துவத்தின் அவசியத்தை பற்றியும் கூறினார். இவரை தொடர்ந்து திரு. அல்தஃப் ஹ{ஸைன் - சார்டீஸ் மற்றும் ஹோம்ஸ் இயக்குனர் மற்றும் மெஜஸ்டிக் பவுன்டேஸன்ஸ்-ன் தாளாளர்தொ ழில் யுத்திகள் மற்றும் தொழில் தர்மங்கள் குறித்தும்வி ளம்பரங்கள் சந்தைபடுத்துதல் பற்றியும் எடுத்துரைத்தார். இவரின் உரையை தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களை கல்லூரியின் தாளாளர் முனைவர் எம்.ஏ. மாலுக் முகமதுää மாஸ்டர் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஸன்ஸ் அவர்கள் கௌரவித்து நினைவு பரிசுகளை வழங்கினார். 


மேலும் திரு. ஷாஜித் ஷதாக் - ப்ராஜக்ட் இன்வஸ்மெண்ட் அட்வைசரி இயக்குனர் இன்னோ அட்வைசரி இந்தியா லிமிடெட்-ன் நிர்வாக இயக்குனர் தொழில் முனைவோருக்கான புதிய போக்குகளின் நடைமுறையையும் அதற்கான வழிகளையும் எடுத்துரைத்தார். தொழில் முனைவோர்கள் நிதிமேலாண்மையை திறம்பட எவ்வாறு செயல்படுத்துவது என்பதையும் நிதி திறட்டுவதற்கான வழிமுறைகளையும் எடுத்துக்கூறினார். இவர்களை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும் தொழிலதிபர்கள் தங்களின் கருத்துக்களை வருங்கால தொழில் முனைவோர்களிடம் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியானது கலந்து கொண்ட ஒவ்வொருவரையும் தொழிலதிபர்களாக செயல்பட ஊக்குவிக்கும் வகையில் இருந்தது. இறுதியாக நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

0 comments: