Saturday, August 05, 2017

On Saturday, August 05, 2017 by Tamilnewstv in ,    
திருச்சி்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் 52வது ஆண்டு விளையாட்டு போட்டிகள் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.


மாணவ, மாணவியர்களுக்கான 100,200,400,1500,5000 மீ ஓட்டபந்தயங்கள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், ஈட்டி, தட்டு, சுத்தியல் எறிதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.  ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை 68 புள்ளிகள்  பெற்ற பச்சை அணியும், தனி நபர் சாம்பியன் பட்டத்தை மாணவர்கள் பிரிவில் 14 புள்ளிகள் பெற்ற மூன்றாம் ஆண்டு கனினி துறையைச் சார்ந்த எஸ். ஜெரோம் அபிலாஷ், மற்றும் மாணவியர்கள் பிரிவில் 16புள்ளிகள் மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறையைச் சார்ந்த எப். தீபிகா மார்டினா ஆகியோர் பெற்றனர்.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் கொச்சி கஸ்டம்ஸ் ஓய்வு பெற்ற துனை ஆனையர் மற்றும் இந்திய அணியில் பங்கேற்ற முன்னாள் கால்பந்து வீரர் சி.சி. ஜேக்கப் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கல்லூரி முதல்வர் டி. பால் தயாபரன், துனை முதல்வர்கள் எப். சாமுவேல் கிறிஸ்டோபர், ஏ. ரெல்டன், காசாளர் எஸ். இசைய்யா, உடற்கல்வி துறைத்தலைவர் எல்.சி. ஜான், உடற் கல்வி இயக்குநர்(பொ). ஏ. பால்ராஜ், உதவி உடற் கல்வி இயக்குநர் ஏ. அனுசுயா தேவி ஆகியோர் முன்னிலையில் பரிசுகளை வழங்கினார்.
பட விபரம்: திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற 52 வது விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்ற பச்சை நிற அணி மற்றும் சிறப்பு விருந்தினர், கல்லூரி நிர்வாகிகள்.

0 comments: