Tuesday, March 20, 2018

On Tuesday, March 20, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி        20.3.18


கடும் எதிர்ப்புக்கிடையே தமிழகத்துக்குள் நுழைந்தது ராம ராஜ்ஜிய ரத யாத்திரை

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தமிழகத்துக்குள் நுழைந்தது. தமிழக-கேரள எல்லையான  கோட்டை வாசல் பகுதிக்குள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.  விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ராமராஜ்ய ரத யாத்திரை தொடங்கியது. இந்த ரத யாத்திரை பல்வேறு மாநிலங்களை கடந்து கேரள மாநிலத்திலிருந்து நெல்லை மாவட்டம் வழியாக தமிழகம் வந்தடைந்தது.

நெல்லையில் 144 தடை
நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரை நடைபெறவுள்ளதால் அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மார்ச் 23ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார். இதற்காக நெல்லை மாவட்டத்தில் பாதுகாப்புக்காக 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் முழுவதும் 32 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ரத யாத்திரைக்கு எதிர்ப்பு
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  கடும் எதிர்ப்பை மீறி தமிழக அரசு ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து தமிழக எல்லையான செங்கோட்டை பகுதிக்கு ரத யாத்திரை வந்து சேர்ந்தது. ரத யாத்திரை தமிழகத்தில் நுழைய எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் தமுமுக, எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரசியல் கட்சித் தலைவர்கள் கைது
முன்னதாக போராட்டம் நடத்த சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் மதுரை திருமங்கலம் அருகே ஏ.பாறைப்பட்டியில் கைது செய்யப்பட்டார். போராட்டத்திற்கு செல்லும் வழியிலேயே விடுதலை சிறுத்தை கட்சி யின் தலைவர்எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் கைது செய்யப்பட்டார் . இதேபோல் தென்காசியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் கொளத்தூர் மணி, ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டனர்.  அதனை தொடர்ந்து 

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

இந்நிகழ்வில் மாநில கருத்தியல் பரப்பு மாநிலதுணை செயலாளர் தொழிலதிபர் எம்.கே முருகன்திருச்சி  தெற்கு மாவட்ட செயலாளர் முத்தழகன் தொழிலாளர் விடுதலை   முன்னணி மாநிலசெயலாளர் பிரபாகரன்அரசு(இலஞ்சிறுத்தை மாநில துணைசெயலாளர்) புல்லட்லாரண்ஸ்(மாவட்டதுணைசெயலாளர்)நடாளுமன்ற தொகுதி செயளாளர்கள் தங்கதுரை மற்றும் தமிழாதன் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணிஆகியோர்  கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர்.

பேட்டி - திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை

0 comments: