Wednesday, March 14, 2018
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு
கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை
மாலை 3.00 மணியளவில் கல்லூரி திறந்த வெளி கலையரங்கத்தில்
அமைக்கப்பெற்ற சிறப்பு பந்தலில் இனிதே நடைபெற்றது. கல்லூரி முதல்வர்
முனைவர் த. பால் தயாபரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற
இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் மற்றும் சிறப்பு
அலுவலர் திரு. என். ரவிச்சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக்
கலந்து கொண்டு விழாச் சிறப்புரை ஆற்றினார்கள்.
கல்லூரியின் பகுதி V செயல்பாட்டு விரிவாக்க அறிக்கையை (2017-18
கல்வியாண்டிற்கு) கல்லூரி விரிவாக்கப் பணிகள் புல முதன்மையர் முனைவர்
சி.தனபால் அவர்கள் தொகுத்தளித்தார்கள்.
மதிப்புறு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சிராப்பள்ளி ‘ஸ்கோப்’
தொண்டு நிறுவன இயக்குநர் முனைவர் எம். சுப்புராமன் அவர்கள்
வாழ்த்துரை வழங்கினார்கள். சிறந்த தன்னார்வ தொண்டர்களுக்கான
விருதுகளை கல்லூரியின் துணை முதல்வர் எ·ப். சாமுவேல் கிறிஸ்டோபர்
அவர்களும், சுயநிதிப் பிரிவின் துணை முதல்வர் முனைவர் ஆ.ரெல்டன்
அவர்களும் வழங்கினார்கள். பகுதி V பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர்களை
கல்லூரி முதல்வர் பாராட்டி சிறப்பு செய்தார்கள்.
சிறந்த சேவை செய்த பிரிவிற்கான விருதினை மாநகராட்சி ஆணையர்
அவர்கள் வழங்கி சிறப்பு செய்தார்கள்.
முன்னதாக இறைவாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய
இந்நிகழ்விற்கு வருகை தந்தோரை கல்லூரி இயற்கை கழக ஆசிரிய
பொறுப்பாளர் திருமதி கிளெனி ஜோஸ்லின் அவர்கள் வரவேற்றார்கள். கல்லூரி
விரிவாக்கப் பணிகள் புல இணை முதன்மையர் முனைவர் எம். கேபிரியேல்
அவர்கள் நன்றி கூறினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
பிளவக்கல் மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து கண்மாய்களுக்கு நீர் செல்லும் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என ஆட்சியர் தெரிவித்த...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
Contribution of Rs.25 lakhs to Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund (PMCARES) Fund We the All ...

0 comments:
Post a Comment