Friday, March 16, 2018
பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்கள் உள்நாட்டில் தயாரிக்க முன்வர வேண்டும்–அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
திருச்சியில் தொழில்துறையினர் நடத்தும் கருத்தரங்கில் தமிழக அமைச்சர்கள், துப்பாக்கி தொழிற்சாலையின் உயர்அதிகாரிகள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு தொழில் வளர்ச்சிக்கான கருத்துக்களைப் பரிமாறி கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசுகையில் :
இந்தியஅளவில் உள்ள தொழில்களில் மத்திய அரசின்கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில்தனியார் மயமாக்குதல் என்பது எந்தவகையில் வளர்ச்சி பாதையை நோக்கிப் பயணிக்கும்என்பது குறித்த விளக்கங்களைத்தெரிவித்தார்
பொது நிறுவனங்கள் தற்போது சிறு தனியார் நிறுவனங்களை நம்பி தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே பொதுத்துறையில்தனியார் தலையீடு இருந்தால் வேலைவாய்ப்புஅதிகரிக்கும், பொருட்களின் உற்பத்தி, பொருட்களின் தரத்தில் கூடுதல் கவனம், என்றும், பல வளர்ச்சிகள் உள்ளதாக கூறினார்.
திருச்சியைப் பொறுத்தவரை பாரத மிகுமின்நிலையம், துப்பாக்கி தொழிற்சாலை, உள்ளிட்டவற்றிலும் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பாரதமிகு மின் நிலையத்தைச்சுற்றி உள்ளசிறு, குறு தொழில் முனைவோர்கள்தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கும் ஒரு வாய்ப்புஇந்தத் தனியார் மயமாக்குதல் மூலம் நடக்கும்என்று கூறினார்.
ராணுவ தளவாடங்களை தமிழகத்தில் உற்பத்தி செய்யவும், தேஜஸ் விமானங்களை போர் விமானங்களாக தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்கள் உள்நாட்டில் தயாரிக்க முன்வர வேண்டும்
தனியார் தலையீடு இல்லாமல்பொதுத்துறைநிறுவனங்கள் செயல்பட முடியாது. பலதிறமையானவர்களை தனியார் மயாக்குதல் மூலம் பயன்படுத்தி கொள்ள முடியும், குறிப்பாக இந்திய இராணுவத்திற்கும், தமிழககாவல்துறைக்குமான தேவையை தற்போதுஉள்ள இந்தபொதுத்துறை நிறுவனத்தால்கொடுக்க முடியவில்லை. ஆனால் தனியாரின்தலையீடு இருந்தால் அதை நாம் ஈடுசெய்யமுடியும். நாங்கள் எதையும் விற்கவில்லைஅனைத்தையும் உயிர்ப்பிக்க முயற்சிசெய்கிறோம். என்று தெரிவித்தார். நம்முடைய நாட்டில் பாதுகாப்பு துறையை தனியார் மூலம் வலிமையான நிறுவனங்களாக மாற்ற முடியும் என்பது தான் மத்திய அரசின் கொள்கை எனவே அதனை செயல்படுத்த தான் இதுபோன்ற கருத்தரங்குகள் மூலம் மக்களிடம் தனியார் மயமாக்குதலை பற்றி எடுத்துக்கூறி வருகிறோம் என்று கூறினார்.
தொழிற் வளர்ச்சிக்கான சர்வதேச மாநாடுநடைபெற உள்ளது அதில் 60 நாடுகள் மற்றும்75 நிறுவங்கள் கலந்து கொள்வதாகவும் இதில்50% மானியத்துடன் வழங்கப்படும் என்றும்தெரிவித்தார். மேலும் அரசு மற்றும் தனியார்நிறுவனங்கள் நன்று வளர்ந்து Make in indiaதிட்டத்தின் கிழ் கொண்டு வந்து நாட்டைமுன்னேற்ற பாதையில் கொண்டு போவதே எங்கள் நோக்கம் எனவும் தெரிவித்தார்.இந்தியா ஏற்றுமதியில் சிறந்து விளங்கஓத்துழைக்குமாறும் வலியுறுத்தினார்..
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...


0 comments:
Post a Comment